தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலைசிற்பங்கள் கொண்ட பூங்கா

சென்னை – கொன்னூர் நெடுஞ்சாலையில் இரும்பு கழிவுகளால் உருவாக்கப்பட்ட கலைசிற்பங்கள் கொண்ட பூங்கா பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கொன்னூர் நெடுஞ்சாலையில் ஐ.சி.எப் தொழிற்சாலையால் இரும்பு கழிவுகளைக் கொண்டு தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைசிற்பங்கள் கொண்ட பூங்கா திறக்கப்பட்டுள்ளது.தொழில்முறை கலைஞர்களான செழியன், ஜேக்கப் ஜெபராஜ், ஷாலினி மிஷ்வஜித் உள்ளிட்டோர் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் குத்துவிளக்கு, முளைப்பாரி, கலையரசி உள்ளிட்ட 9 கலைசிற்பங்களை உருவாக்கி மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர்.

இதற்கான துவக்க விழா மற்றும் கலைஞர்களை கவுரவிக்கும் விழா சென்னை ரயில் அருங்காட்சியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த கலைஞர்களுக்கு அரசு கவின் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் அல்போன்ஸா அருள்தாஸ் நினைவு பரிசு வழங்கினார்.

 

Exit mobile version