மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு திருவல்லிக்கேணி பகுதியில் துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடர்பாக பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த அணி வகுப்பு நடைபெற்றது. தமிழக காவல்துறையினரும் அணிவகுப்பில் பங்கு கொண்டனர்.