தேர்தலை முன்னிட்டு புதிய டூடுல் வெளியிட்ட கூகுள்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால், கூகுள் நிறுவனம் தேர்தலுக்கான டூடுலை வெளியிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்றழைக்கப்படும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கான மக்களவைத் தேர்தல் இன்று துவங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், சிக்கிம், மகாராஷ்டிரா உள்பட 20 மாநிலங்களில் இன்று தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, கூகுள் இந்தியா நிறுவனம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் டூடுல் வெளியிட்டுள்ளது.

 

Exit mobile version