சினிமாவுல தான் பாத்துருக்கோம்..ஆனா இங்க நிஜத்துலேயே செஞ்சிட்டாங்கப்பா…

ஆட்டோ ஓடிக்கொண்டிருக்கும் போதே ஆட்டோவின் டயரை கழற்றி மாற்றும் வீடியோ சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.

சினிமாவுல மட்டும் தான் சில விஷயங்கள பாத்து வியந்திருப்போம்.அதுல ஒன்னு பறக்கும் கார்,இரண்டு டயரில் ஓடும் ஆட்டோ இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இப்படி நிஜ வாழ்க்கையில் செய்து பார்த்து, பலர் அடி வாங்கிய கதைகளும் உண்டு.சினிமாவில் மட்டும் தான் இப்படியான காட்சிகள் அமைக்கமுடியும் என்பதை மாற்றும் வகையில் சிலர் ஓடும் ஆட்டோவிலேயே சாகசம் செய்துள்ளனர்.

ஆம்.ஆட்டோ ஓடிக்கொண்டிருக்கும் போதே ஆட்டோவின் டயரை கழற்றி மாற்றியுள்ளனர்.ஆட்டோவை ஒருவர் இரண்டு டயர்களில் ஓட்டுகிறார்,பின்னாடி உட்கார்ந்துகொண்டிருக்கும் இன்னொருவர் ஆட்டோவின் டயரை கழற்ற, பக்கத்தில் வரும் ஆட்டோவிலிருந்து ஒருவர் மாற்று டயரை கொடுத்த பின் டயரை மாற்றுக்கின்றனர்.இவர்கள் செய்த சாலை சாகச வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Exit mobile version