மறைந்த அன்னைக்காக மகன் கட்டியுள்ள தாய்க்கோயில்..

அன்னையர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சியில் அன்னைக்காக தாய் கோயில் என்ற பெயரில் எழுப்பப்பட்டுள்ள ஆலயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. இதுகுறித்த செய்தி தொகுதிப்பை தற்போது காணலாம்…

தாயிற் சிறந்த கோயில் இல்லை.. போற்றுதலுக்கு உரிய அன்னைக்கு நாளை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

தனது தாயின் மீது கொண்ட அளவு கடந்த அன்பினால் திருச்சி துறையூர் -ஆத்தூர் சாலையில் 2.75 ஏக்கரில் தனபாக்கியம் அம்மாள் திருக்கோயில் என்ற பெயரில் சுரேஷ்குமார் கோயிலை எழுப்பியுள்ளார்.

தேசிய விருது பெற்ற கும்பகோணம் ராமசாமி அவர்களால் வடிவமைக்கப்பட்ட 4 அடி உயரமுள்ள தனபாக்கியம் அம்மாளின் வெண்கல சிலை அனைவரையும் கவரும்வகையில் உள்ளது. 64 ஆண்டுகள் தனது தாய் வாழ்ந்ததை குறிக்கும் வகையில் 64 அடி உயர கிரானைட் கல் தூணும் இந்த தாய்க்கோயிலை அலங்கரிக்கிறது.

இங்குள்ள சுவற்றில் தனபாக்கியம் அம்மாளின் உருவம் 64 விதங்களில் வரையப்பட்டுள்ளது. கோயிலை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள மீன்தொட்டி, நடைமேடை, பூங்கா, தியானமண்டபம் உள்ளிட்டவையும் அனைவரையும் கவர்கிறது.

தனது பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் நபர்கள் அதிகரித்து காணப்படும் இந்த காலகட்டத்தில் சுரேஷ்குமார் கட்டியுள்ள இந்த தாய்கோயில், தனபாக்கியம் அம்மாளுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு தாய்க்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் உள்ளது.

Exit mobile version