23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா முடிந்து முன்று வாரங்கள் ஆன நிலையிலும், கோவிலில் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகமாகவே காணப்படுகின்றது.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா கடந்த 5ஆம் தேதி சிறப்பாக நடைபெற்ற நிலையில், 24 நாட்களுக்கான மண்டலாபிஷேகம் தினமும் நடைபெற்று வருகிறது.
கடந்த 1ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 13 லட்சம் பக்தர்கள் வந்த நிலையில், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடமுழுக்கு விழாவை காண முடியாத ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள், கோவிலை காண திரண்டு வந்து செல்கின்றனர்.
காலை முதலே தமிழகம் மட்டுமன்றி வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பெரிய கோயில் சாலை முழுவதும் சுற்றுலா வாகனங்கள் இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், உணவு, தங்குமிட, வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post