ஆரணியில் போலி சாவி மூலம் துணிக்கடை குடோனில் திருடிய முன்னாள் ஊழியர் உட்பட இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரை சேர்ந்த சோமசுந்தரம், ஆரணி பஜார் வீதியில் துணிக்கடை வைத்துள்ளார். இவரிடம் 2 ஆண்டுகளாக வேலை பார்த்துவந்த தாஸ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கடையிலிருந்து விலகிவிட்டார். இதனிடையே தாஸும், மற்றொரு துணி வியாபாரியான பிரபாவதியும் சோமசுந்தரத்தின் குடோனிலிருந்து துணிகளை திருடிவந்துள்ளனர். சோமசுந்தரத்திடம் வேலை பார்த்தபோது குடோனுக்கான கள்ளச்சாவிகளை தாஸ் செய்து வைத்திருந்ததால் யாருக்கும் தெரியாமல் திருட்டு தொடர்ந்துள்ளது. இந்தநிலையில் வழக்கம்போல் கள்ளச்சாவிகளை பயன்படுத்தி திருடச் சென்ற தாஸ் மற்றும் பிரபாவதியை எதிர்க்கடைக்காரர் பார்த்து விசாரித்ததால் இருவரை அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிட்டனர். இந்தநிலையில் திருட்டு குறித்து தகவல் அறிந்த சோமசுந்தரம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தாஸ் மற்றும் பிரபாவதியை கைது செய்து 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Discussion about this post