கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோழிகள் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேலயத்தொட்டி கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் சொந்தமாக கோழிப் பண்ணை வைத்துள்ளார். இந்த கோழிப்பண்ணையில் கோழிகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போதுள்ள கடுமையான வெயிலின் தாக்கத்தால், கோழிகள் வியாபாரத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், பண்ணையில் திடீரென இரவில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. இதில் பண்ணை முற்றிலுமாக சேதமடைந்தது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.