இந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் இந்திய நாட்டின் பிரதமராக 2வது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி மாமல்லபுரத்திற்கு வருகை தந்து உலக நாடுகளின் பார்வையை காஞ்சிபுரத்திற்கு திருப்பினார்.
இவர் ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வருகை தரும்போது go back modi என்ற ஹேஸ்டாக் ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்தாலும், பிரதமர் மோடி மீது தமிழக விவசாயிகளுக்கு தீராத அன்பு இருக்கிறது என்பதை ஒருவர் நிரூபித்து காட்டியுள்ளார்.
ஆம். திருச்சி துறையூர் அருகே எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு சிறு வயதிலிருந்தே பிரதமர் மோடி மீது தீராத பற்று இருந்திருக்கிறது.எனவே தனது சொந்த செலவில் அவருக்கு ஒரு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட வேண்டும் என்று விரும்பினார்.
இந்த நிலையில் ஷங்கர் தனது விவசாய தோட்டத்தில் மோடிக்கு கோவில் கட்டி சிலை அமைத்து தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார். தினமும் அவரது சிலைக்கு பாலாபிஷேகமும் செய்து வருகிறார்.இந்தக் கோயிலுக்கு பாஜக கட்சியின் மூத்த தலைவர்களை வைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது தான் இவரது ஆசையாம்.
மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டராகவும், எரகுடி விவசாய சங்க தலைவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.