அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அடுத்தடுத்து சுற்றி சுழன்றடித்த சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.
அலபாமா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதி மற்றும் ஜார்ஜியா மாகாணத்தின் சில பகுதிகளில் அடுத்தடுத்து பலத்த வேகத்துடன் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் வீடுகளின் மேற்கூரைகள், வாகனங்கள் காற்றில் பறந்தன. சூறாவளி புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. சூறாவளிப் புயலில் பலர் காணாமல் போயுள்ளநிலையில், அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், கடுமையான சூறாவளி வீசக்கூடும் என்பதால், அவசரகால நடவடிக்கைகளை அலபாமா மாகாண நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Discussion about this post