கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் -முதலமைச்சர் அறிவிப்பு

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரி மாவட்டம், தேவூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மணிமண்டபமும் நூலகமும் அமைக்கப்படும் என்று, விதி எண் 110 கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். முத்தரையருக்கு திருச்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்றும், இரட்டைமலை சீனிவாசனுக்கு மதுராந்தகத்தில் சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும் நூலகமும் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். பென்னி குயிக்கின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று  முதலமைச்சர் அறிவித்து இருப்பதற்கு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி வரவேற்பு தெரிவித்துள்ளார். தேசிய விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் வைக்க வேண்டும் என்பது கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கோரிக்கை, மற்றும் சி.பா. ஆதித்தனாருக்கு அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என்ற உத்தரவை மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். 

Exit mobile version