வங்கதேசத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் ரோஹிங்கியா முஸ்லீம்களை நாடு கடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்த கோரி பாஜக ஆர்வலரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து, 40 ஆயிரம் பேர் சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கியுள்ளதாகவும், அவர்கள் ஒரு அமைப்பாக திரண்டிருப்பது, தேசிய ஒருங்கிணைப்பை கடுமையாக பாதிப்பதாக குறிப்பிட்டிருந்தார். தற்போதைய சூழலில் அவர்கள் இந்தியாவில் தங்கியிருப்பது நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும், அஸ்வினி உபாத்யாயா அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
Discussion about this post