தேசத் துரோக சட்டத்தை நீக்குவதாக காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், இதை எதிர்த்து ராகுல்காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், மத்தியில் ஆட்சிக்கு வந்தால், தேசத் துரோக சட்டம் 124ஏ நீக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் ராகுல்காந்தியின் இந்த வாக்குறுதியை எதிர்த்து ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நரேந்திர ஷர்மா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 16ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.