தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொல்லியல் துறையினருடன் இணைந்து 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோயிலில் இருந்து கடத்தப்பட்ட ராஜராஜ சோழன் சிலையும், லோகமாதேவி சிலையும் குஜராத் மாநிலத்தில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு வந்தனர். பெரிய கோயிலில் அந்தச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து கோயிலில் அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர்.
கடந்த 11ம் தேதி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி. ராஜாராமன் தலைமையில் போலீசாரும், இந்திய தொல்லியல் துறை தெற்கு மண்டல கூடுதல் இயக்குனர் நம்பிராஜன் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்தனர். சதய விழா நடைபெறும்போது கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post