தீபாவளியன்று அரசு மருத்துவமனைகளின் காய்ச்சல் பிரிவில் மருத்துவர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றுமாறு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. பல்வேறு காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் காய்ச்சல் பிரிவு தொடர்ந்து இயங்கி வருகிறது.
எனவே தீபாவளியன்று மருத்துவர்கள் விடுப்பு எடுக்க கூடாது என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன் படி ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருத்துவரும், மாவட்ட தலைமை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சுழற்சி முறையிலும் டாக்டர்கள் பணியாற்றுவர். மேலும் தீக்காய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Discussion about this post