வி.வி.மினரல்ஸ் நிறுவனங்களில் 5-வது நாளாக சோதனை மேற்கொண்டு வரும் வருமான வரித்துறையினர், அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 30 வங்கிக் கணக்குகளையும், வங்கி லாக்கர்களையும் முடக்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என புகார் கூறப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் வி.வி.மினரல்ஸ் உரிமையாளருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, விவி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 30 வங்கிக் கணக்குகளையும், 24 வங்கி லாக்கர்களையும் முடக்கியுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post