அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கேட்டுக்கொண்டார்.
சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் அ.தி.மு.கவின் 47-வது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், தாய் கழகத்தில் இருந்து பிரிந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீண்டும் அ.தி.மு.கவில் வந்து சேர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கு இந்திய அரசு காரணமில்லை என்று கூறிய அவர், அ.தி.மு.க பொருத்தவரை அங்குள்ள தமிழர்களுக்கு சேரவேண்டிய நலதிட்ட உதவிகள் அனைத்தும் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். ராஜபக்சே குறித்து ஜெயலலிதா கொண்டிருந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post