ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு பிரதமருடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஜப்பான், இந்தியா நாடுகளின் 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டோக்கியோ நகருக்கு சென்றுள்ளார். அவருக்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தனது வீட்டில் விருந்து அளித்து கவுரவித்தார். இந்தநிலையில் இன்று இருநாட்டு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது ராணுவம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஜப்பான் வாழ் இந்தியர்கள் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். சேவை என்ற சொல் ஜப்பானிலும், இந்தியாவிலும் ஒன்றுதான் என்று அவர் கூறினார்.
Discussion about this post