விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வருவதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, வானொலி மூலம் மக்களுக்காக உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் ஒலிபரப்பாகி வருகிறது. அதன்படி 49-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அதில், ஒற்றுமையின் அடையாளமாக, உலகின் மிகப்பெரிய சர்தார் படேலின் சிலை, வரும் 31ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறந்து விளங்குவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இன்னும் பல சாதனைகளை இந்திய வீரர்கள் படைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.17 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியை சிறப்பாக நடத்தியுள்ள இந்தியா, பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இயற்கையைக் காப்பது நமது கடமை என கூறிய பிரதமர் மோடி, அதற்கான நடவடிக்கைகளில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நாட்டிற்காக தியாகம் செய்த ராணுவ வீரர்களின் சேவைக்காக தலை வணங்குவதாகவும், வானொலி நிகழ்ச்சியில் மோடி குறிப்பிட்டார்.
Discussion about this post