தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பிளஸ் 2 முடித்த 25 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையை தூர் வாரும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி பள்ளிகல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்கும் நோக்கில், பிளஸ் 2 முடித்தவுடன் ஆடிட்டர் படிப்பிற்கு முதற்கட்டமாக 25ஆ மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், அவர்களுக்கு சிறந்த ஆடிட்டர்களை கொண்டு முதன்மை தேர்வை எழுத பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் கூறினார்.
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post