திமுகவில் இருக்கும் சனாதனத்தை ஒழிக்க முடியாமல், தந்தையை போலவே விளம்பர அரசியல் செய்வதற்காக சனாதனத்தை பற்றி பேசி அரசியல் செய்து வருகிறார் வாரிசு அமைச்சர். இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு…
அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல், சேவை செய்தல், பெற்றோர்களை எப்படி மதித்து நடத்த வேண்டும், இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும் என போதிப்பதே, பண்டைய கலங்களில் சனாதனமாக பார்க்கப்பட்டது. ஆனால் திமுக ஆரம்பத்த நாளில் இருந்தே இதுபோன்ற கொள்கைகளை அவர்கள் பின்பற்றியது இல்லை. தன்னுடைய குடும்ப வளர்ச்சியை மட்டுமே குறியாக வைத்து திமுக தலைவராக இருந்த கருணாநிதியும், தற்போதைய தலைவராக இருக்கும் ஸ்டாலினும், புதிய தலைவராக உருவெடுத்து வரும் உதயநிதியும் செயல்படுத்தி வருகின்றனர்.
பல கோடி செலவு செய்து, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஆட்சியைப் பிடித்த கையோடு தமிழக மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களையும் செயல்படுத்தாமல், ஏற்கனவே உள்ள மக்கள் நல திட்டங்களை தடுத்து நிறுத்திவிட்டு, மக்கள் மனதில் திமுக என்றாலே ஒவ்வாமை ஏற்படும் அளவிற்கான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளனர்.
நீட் தேர்வு ரத்து, இந்தியா கூட்டணி சொதப்பல்களில் இருந்து தப்பிக்க சனாதனத்தைக் கையில் எடுத்து கிளம்பியுள்ளார் உதயநிதி. ஆட்சியே போனாலும் பரவாயில்லை, சனாதனத்தை ஓழித்தே தீருவேன்னு சொல்லி அப்பா போலவே மகனும் விளம்பர அரசியலை செய்து வருகிறார்.
உலகத்தையே உலுக்கிய கொரோனா எப்படி உருமாற்றம் பெற்று தன்னுடைய தாக்குதலை மேற்கொண்டதோ அதைப் போலவே திமுகவும் தேவைக்கேற்றார் போல தன்னை உருமாற்றம் செய்து உடன்பிறப்புகளையும், தமிழக மக்களையும் ஏமாற்றும். திமுகவில் நிலவும் சனாதனத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் வெற்றுக் கூப்பாடுகளை போட்டு வருகின்றனர் ஸ்டாலினும், வாரிசு அமைச்சரும். இதில் மகனைக் காப்பாற்ற அப்பா வீடியோ எல்லாம் வெளியிட்டு வருகிறார். இது அரசியல் களம், ஷூட்டிங் ஸ்பாட் அல்ல என யாராவது இவர்களுக்கு புரிய வைத்தால் நலம்…
Discussion about this post