தொலைக்காட்சி தோன்றிய காலக்கட்டத்திலிருந்தே குழந்தைகளுக்கு புதிய புதிய நிகழ்ச்சிகளை கொண்டுவருவதில் ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும் முனைப்புக் காட்டி வந்தனர். குழந்தைகளை ஈர்ப்பதன் மூலம் தங்கள் தொலைக்காட்சிகளை பிரபல்யத்தன்மைக்கு கொண்டு செல்லலாம் என்பது அவர்களின் கணக்கு. அப்படி கொண்டுவரப்பட்டு குழந்தைகள் அனைவரையும் கவர்ந்திழுத்த நிகழ்ச்சிகளில் ஒன்று “பவர் ரேஞ்சர்ஸ்”.
தொண்ணூறுகளின் பிற்பகுதியிலும் இரண்டாயிரத்தின் முற்பகுதியிலும் பிறந்து வளர்ந்த் அத்தனைக் குழந்தைகளுக்கும் பவர் ரேஞ்சர்ஸ் என்பது வாழ்வின் கொண்டாட்டம் தான். சாதாராண நபராக இருக்கக் கூடியவர்கள் சக்திப் பெற்று பவர் ரேஞ்சர்ஸாக மாறுவார்கள். பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் காலக்கட்டத்தில் மக்களோடு மக்களாக இருக்கும் இவர்கள் பவர் ரேஞ்சர்ஸாக உருமாறி எதிரிகளை துவம்சம் செய்வார்கள். சூப்பர் ஹீரோக்கள் படங்களின் மலிவு விலை காட்சியகம் தான் இந்த பவர் ரேஞ்சர்ஸ் என்று சொல்வத்ல் மிகையல்ல. ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ப புதியவகை பவர் ரேஞ்சர்ஸ் எபிசோட்கள் உருவாக்கப்படும். வைல்ட் ஃபோர்ஸ், டெனோ தண்டர், டைம் ஃபோர்ஸ், எஸ்பிடி, மிஸ்டிக் ஃபோர்ஸ் என்று வகைவகையான பவர் ரேஞ்சர் நிகழ்ச்சிகள் களம் இறக்கப்பட்டன. இதில் அனைவரின் மனதிலும் பெரும்பாலும் பதிந்த பவர் ரேஞ்சர்ஸ் எபிசோட் எஸ்பிடி தான். இந்த பவர் ரேஞ்சர்ஸ் நிகழ்ச்சி எந்த அளவுக்கு கேளிக்கை மிக்கதாக இருந்ததோ அதே அளவுக்கு குழந்தைகளின் மன அளவில் தங்களையும் சூப்பர் ஹீரோக்களாக நினைக்க வைக்கும் தன்மையையும் வளர்த்தெடுத்தது. இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போதே, இதில் வரும் சண்டைக் காட்சிகள், சாகசங்கள் அனைத்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியால் செய்யப்பட்டது. எனவே, யாரும் இதனை வீட்டிலும் வெளியிலும் முயற்சி செய்ய வேண்டாம் என்று சொல்லியே தொடங்கும். இதற்கு காரணம் இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகளை குழந்தைகள் செய்து மரணம் எய்தியுள்ளனர். எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட நிகழ்ச்சிகளிலும் சாதகம் மற்றும் பாதகம் ஆகிய இரண்டும் உண்டு. தற்போதைய தலைமுறையினருக்கு பவர் ரேஞ்சர்ஸ் பற்றி அதிகம் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அவர்களின் ரசிப்புத் தனமை வெவ்வேறு வகைக்கு மாறிவிட்டது. சில பழைய விசயங்களை திரும்பி பார்ர்க்கும்போது, அது காலத்தால் அழியாது இருக்கும். அப்படிப்பட்டதுதான் 90களில் வாழ்ந்த குழந்தைகளின் பவர் ரேஞ்சர்ஸ் மோகம்.
Discussion about this post