அதிமுக மதுரை மாநாட்டிற்கு புறப்படும் வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்டநிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்,
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் :-
கச்சத்தீவை தாரை வாத்தவர் அன்றைய முதல்வர் கருணாநிதி, இன்று அவருடைய மகன் ஸ்டாலின் கச்சத் தீவை மீட்பேன் என்கிறார், என்ன உரிமை உள்ளது,
கச்சத்தீவு குறித்து அன்று மத்திய அரசு 2 ஆலோசனை கூட்டம் வைத்தது, அதில்
அன்றைய முதல்வர் கருணாநிதி பங்கேற்றார், ஒரு எதிர்ப்பையோ கண்டனத்தையோ
தெரிவிக்கவில்லை, இது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் போதும் மீனவர்களுக்காக வருத்தம் தெரிவித்தார்கள் தவிர ஒரு கண்டனத்தையும் தீர்மானத்தில்
தெரிவிக்கவில்லை. திமுகவால் தாரை வார்க்கபட்ட கச்சத்தீவை மீட்க நடவடிக்கை மேற்கொண்டவர். ஜெயலலிதா, அவர்கள் அப்போது மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்றவர் கருணாநிதி, அது சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதை யாராலும் மறுக்க முடியாது.
திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்து தற்போது பேசுவது ஏன் என கேள்வி
எழுப்பியதாய் தொடர்ந்து திரைப்பட நகைச்சுவை போல இன்று ஸ்டாலின் கச்சத் தீவு
விவகாரத்தில் மக்களை ஏமாற்றி வருகிறார், தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும்
மோசடியான செயல் தான் இது அதிமுக மாநாடு குறித்து செய்தி வெளிவராமல் செய்ய செங்கல் நாயகன் உதயநிதி ஸ்டாலின் நீட் என கூறி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார், நீட்டுக்கான உண்மையான நடவடிக்கை அவர்கள் பிரதமரையோ குடியரசுத் தலைவர் தலைவரையோ சந்தித்து பேசி இருக்க வேண்டும், ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை, மறுபுறம் கட்சியே இல்லாத ஓபிஎஸ் மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்துகிறார். மேலும் தன்னுடைய மாவட்டம் முழுக்க சுமார் 150 வாகனங்களில் 1500 க்கும் மேற்பட்டோர் மாநாட்டிற்காக புறப்பட்டு இருப்பதாகவும், நடைபெறவிருக்கும் மதுரை மாநாடு பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
Discussion about this post