170 கிராம் கொண்ட தயிர் பாக்கெட் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அவற்றை 70 கிராம் குறைத்துவிட்டு 100 கிராம் கொண்ட தயிர் பாக்கெட் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தஞ்சாவூர் ஆவின் ஒன்றியத்தில் இன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி தயிர் விலையை உயர்த்தியுள்ளது ஆவின் நிர்வாகம். மேலும் பாதம் பால் பவுடர், வெண்ணை விலையை கடந்த வாரம் உயர்த்திய நிலையில் இன்று ஆவின் தயிர் விலையை உயர்த்தியுள்ளது ஆவின் நிர்வாகம். ஆவின் பால் பொருட்களின் விலைய படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இன்று தயிர் விலையை நூதன முறையில் ஆவின் நிர்வாகம் மறைமுகமாக உயர்த்தியுள்ளது.
ஆவின் தயிர் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்ந்தது மட்டுமல்லாமல் ரூ.30 க்கு விற்பனை செய்யப்பட்ட அரை லிட்டர் தயிர் ரூ.35 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஆவின் பால் புவடர், வெண்ணெய் ஆகியவை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் இன்று தயிர் விலையும் உயர்ந்துள்ளது.
இந்த விடியா ஆட்சியில் தக்காளி, வெங்காயம் என்று தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையானது அதிகரித்து வண்ணம் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆவின் நிறுவனமும் அதன் தயாரிப்புப் பொருட்களின் விலையை கிடுகிடுவென உயர்த்தியுள்ளது.
Discussion about this post