உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்க பிரிவு மனு தாக்கல் செய்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அதனை நீதிபதி அல்லி அமர்வானது விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி செந்தில்பாலாஜியை இன்றிலிருந்து ஆகஸ்ட் 12 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே எட்டாம் தேதியுடன் மேலும் புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையிடம் ஆஜர்ப்படுத்தவும் அனுமதி வழங்கியுள்ளது நீதிமன்றம். ஏற்கனவே செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவரது உடல்நிலையும் கருத்தில் கொள்ளப்படும் என்று அமலாக்கத்துறையானது கூறியுள்ளது.
Discussion about this post