ஆவின் நிர்வாகத்துல ஊழல் அதிகாரிகள் காப்பாத்தப்படுறதாவும், வெண்ணெய் கொள்முதல்ல முறைகேடுகள் தொடருறதாவும் பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துருக்கு.
தமிழக பால்வளத்துறை அமைச்சரா இருந்த ஆவடி நாசர தூக்கிட்டு, மனோ தங்கராஜ அங்க கொண்டு வந்ததுமே, ஆவின் பிச்சிக்கிட்டு போயிடும்னு 200 ரூபா உபிஸ் எல்லாம் இணையத்துல கூவிக்கிட்டு இருந்தாங்க….
பால் முகவர்களும் கூட இந்த இரண்டு ஆண்டுல சீரழிஞ்சி போன பால் வளத்துறையிலயும், ஆவின்லயும் மாற்றங்கள் நிகழும், முறைகேடுகள் தடுக்கப்படும், ஊழல் அதிகாரிகள் தண்டிக்கப்படுவாங்க…. ஆவின் நிறுவனம் வளர்ச்சியடையும்னு நெனைச்சாங்க… ஆனா, எல்லாம ஓட்டை விழுந்த ஆவின் பால் பாக்கெட் மாதிரியே புஷ்ஷுன்னு ஆகிப் போச்சு.
இந்த ஆட்சி தொடங்குனதுமே ஆவின்ல இருந்த வெண்ணெய் மற்றும் பால் பவுடர கையிருப்பே இல்லாம குறைஞ்ச விலைக்கு வித்ததோட, ஆவினுக்கான பால் கொள்முதலையும் அதிகரிக்காம மகராஷ்டிரா மாநிலத்துல இருந்து தரம் குறைந்த வெண்ணெய் மற்றும் பால் பவுடர அதிக விலை கொடுத்து வாங்கியிருக்காங்க. அதுல நடந்த முறைகேடுகள் தொடர்பாவும், ஊழல் செஞ்ச 16 அதிகாரிகளோட பட்டியலயும், பால்முகவர்கள் அமைச்சர நேர்ல போய் பார்த்து கொடுத்திருக்காங்க.
ஆனா ரெண்டு மாசமாகியும் அது கிணத்துல போட்ட கல்லாவே இருந்துருக்கு. இதுக்கு இடையில ஊழல் பட்டியல்ல இருந்த அதிகாரிங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்காம, ராஜமரியாதையோட பணியிட மாற்றம் செஞ்சிருக்காங்களாம்.
இப்ப என்னடான்னா, மகாராஷ்டிரா மாநிலத்துல இருந்து இப்போதைய மார்க்கெட் விலைய விட அதிகம் கொடுத்து, வெண்ணெய் மற்றும் பால் பவுடர்னு 10ஆயிரம் டன் கொள்முதல் செஞ்சி அதுமூலமா அதிகாரிங்க தங்களோட கஜானாவ நிரப்புறதுல மும்முரமா இருக்காங்களாம்.
இதெல்லாம் அமைச்சரா இருக்கிற மனோ தங்கராஜுக்கு தெரியாதா? அல்லது வாங்குறத வாங்கிகிட்டு கண்டும் காணாமா இருக்காரான்னு பால் முகவர்களும், தொழிலாளர் நலச் சங்கத்துக்காரங்களும் கேள்வி எழுப்பிருக்காங்க.
ஓரே ஒரு விஷயம்… ஆவின்ல பால் மட்டும்தான் வெள்ளையா இருக்கு… அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரைக்கும் எல்லார் மேலயும் ஊழல் கறை படிஞ்சித்தான் போயிருக்கு.
Discussion about this post