திமுகவுல ஜாங்கிரி எம்.எல்.ஏ யாருன்னு கேட்டா, பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமின்னுதான் சொல்வாங்க. ஏன்னா, போன மாஷம் காட்டுப்பாக்கம் ஊராட்சியில நடந்த சாலை சீரமைப்பு பணிக்கான பூமி பூஜைவிழாவுல பங்கேற்ற எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, ஜாங்கிரி கொடுத்தாரு. ஆண் நிர்வாகிகளுக்கு எல்லாம் ஜாங்கிரியா கையில கொடுத்தவரு, பெண் நிர்வாகி ஒருத்தருக்கு அவங்க மறுத்தபோதும் வலுக்கட்டாயமா வாயிலேயே ஊட்டிவிட்டாரு….
அதனால அவர ஜாங்கிரி எம்.எல்.ஏன்னு சொல்லுறாங்க உபிஸே… இப்போ பூந்தமல்லி நகராட்சி 12 வது வார்டுல பூமி பூஜையில கலந்துக்கிட்டவரு எல்லோருக்கும் லட்டு கொடுத்திருக்காரு. அப்போ பெண்களுக்கும் லட்டுகொடுத்திருக்காரு… செய்தியாளர்கள் எல்லாம் அத படம் பிடிச்சிட்டு இருந்தத பார்த்தவரு, ஒரு லட்ட எடுத்து லேசா பிச்சி தன்னோட வாயில போட்டுக்கிட்டு, யாருக்கும் ஊட்டிவிடுவீங்களோன்னு பார்த்தீங்களான்னு கேட்டுருக்காரு.
அன்னைக்கு ஜாங்கிரி கொடுத்தத படம்பிடிச்சி போட்டு உங்க லட்சணம் இதுதான்னு மக்கள்கிட்ட மீடியாக்கள் காட்டுனதாலதான, இன்னைக்கு அடக்க ஒடுக்கமா லட்ட கையில கொடுத்திருக்கீங்கன்னு நாங்க சொல்லல…. ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
Discussion about this post