புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கு சந்திரயான் – 3 செயற்கைக்கோளானது வெற்றிக்கரமாக தன் பயணத்தைத் துவக்கியுள்ளது. கிட்டத்தட்ட பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலவை ஆய்வு செய்யும் தன் மூன்றாவது முயற்சியில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ ஈடுபட்டது. நிலவில் தரையிரங்கி ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 திட்டம் துவங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி சந்திரயான் – 3 செயற்கைக்கோள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள், புவி வட்டப்பாதையில் சுற்றி வந்தது. இதன் அடுத்த கட்டமாக், நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு செலுத்தும் முயற்சி நேற்றைய தினம் அதிகாலையிலே துவங்கிவிட்டது. இதன்படி, புவி வட்டப்பாதையில் இருந்து செயற்கைக்கோள் தற்போது விலகி, நிலவை நோக்கி தன் பயணத்தை துவக்கி உள்ளது. வரும் ஐந்தாம் தேதி இது, நிலவின் சுற்று வட்டப்பாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிக்கலான இடம் என்னவென்றால் தரையிரங்குவதுதான். சரியாக 23ஆம் தேதி நிலவில் சந்திரயான் – 3 தரையிரங்கும் என்று நம்பப்படுகிறது.
Discussion about this post