இந்தியாவில் உள்ள வணிக நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகளில் 96,000 நிறுவனங்கள் வணிகத்தை வெளியேறி உள்ளன என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தியாக உள்ளது. ஏப்ரல் 1, 2018-லிருந்து மார்ச் 31 2023 வரையான ஐந்து ஆண்டுகளில் 96,261 நிறுவனங்கள் வணிகத்தைவிட்டு வெளியேறிவிட்டன என்ற செய்தி அரசாங்க தரவுகள் மூலம் நமக்கு கிடைக்கிறது. இத்தகைய முடிவை இந்த நிறுவனங்கள் தாமாக முன் வந்து எடுத்துள்ளன என்று அதே தரவுகள் குறிப்பிடுகின்றன.
அதாவது கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாணையம், மொத்தம் 510 நிறுவனங்களுக்கு, நிறுவனங்களை திவால் ஆகாமல் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், இறுதி தீர்ப்பாணை வழங்கியுள்ளது. தற்போதைய சூழலில் 11,037 நிறுவனங்கள் வணிகத்தை விட்டு வெளியேறுவது நிலுவையில் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒரு நிறுவனம் வணிகத்தை விட்டு தானாக வெளியேறுவதற்கான காலம் ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை அல்லது பன்னிரெண்டு முதல் பதினெட்டு மாதங்கள் வரை ஆகி உள்ளது. சிரமத்தில் உள்ள நிறுவனங்கள் வணிகத்திலிருந்து விரைவாக வெளியேற அரசு, “ஸ்பேஸ்” எனும் சிறப்பு மையத்தை கடந்த மே மாதம் துவங்கியிருந்தது. இந்த மையம் துவங்கப்பட்ட பின், ஒரு நிறுவனம் தானாக முன்வந்து தானாக வணிகத்திலிருந்து வெளியேறும் காலம் நான்கு மாதங்களாக குறைக்கப்பட்டது. இந்த வணிக நிறுவனங்கள் வணிகத்தை விட்டு வெளியேறுவதற்கு கொரோனா பெருந்தொற்றுக் காலமும் ஒரு கூறாக சொல்லப்பட்டுள்ளது.
Discussion about this post