தமிழகத்தில் புதிதாக திறக்கப்படும் நூலகம், பேருந்து நிலையம், மருத்துவமனை என அனைத்திற்கும் தனது தந்தை கருணாநிதி பெயரை சூட்டி வருகிறார் ஸ்டாலின். இதில் உச்சபட்சமாக மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்துக்கு கூட கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது போதாது என பள்ளி, கல்லூரிகளிலும் கருணாநிதியின் புராணம் பாடுவதற்கு வசதியாக அவர் எழுதிய நூல்களை பாடதிட்டங்களில் சேர்க்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு தின அரசு நிகழ்ச்சியின்போது கூட பள்ளி மாணவர்களுக்கு வைத்த கட்டுரைப் போட்டிகளின் தலைப்பு கருணாநிதியின் புகழ்பாடும் வகையிலேயே அமைந்தது. இதற்கு அப்போதே ஆசிரியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க, உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டவர் சங்கரலிங்கனார் என்ற தமிழ் ஆர்வலர். இவரது பெயரையும் மறைத்து, தமிழ்நாடு என பெயர் சூட்டிய அறிஞர் அண்ணாவின் பெயரையும் மறைத்து கருணாநிதியின் புகழ் பாட வேண்டிய தேவை என்ன? போதாக்குறைக்கு பேனா சின்னம் வேறு…
இந்தித் திணிப்பு… இந்தித் திணிப்பு என எதற்கெடுத்தாலும் பொங்கும் ஸ்டாலின் அவர்களே, தங்களின் தந்தைப் பெயரை பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் திட்டங்களுக்கு பெயர் சூட்டி வருகிறீர்களே இது திணிப்பு இல்லையா?
போகிற போக்கைப் பார்த்தால் பள்ளிகளில், அரசு அலுவலகங்களில் எல்லாம் காலையில் கருணாநிதி புராணம் பாடிய பின்னர்தான் வேலையைத் தொடங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
Discussion about this post