சட்டவிரோத பணி பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் வகுப்பு கைதி என்பதால் அவருக்கு சிறையில் சகல வசதிகளும் நிறைந்த அறை ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறையை உடைத்து செந்தில் பாலாஜி தங்குவதற்கு என அறை விசாலாமாக்கப்பட்டுள்ளதாம். அந்த அறையில் ஏசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வந்து புதிதாக போடப்பட்டுள்ளது. கட்டில் மெத்தை, டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்கள் அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சிறையில் சிறைத் துறை அதிகாரிகள் அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவதும், தேவையான காரியங்களை செய்து கொடுப்பதுமாக இருக்கின்றனர் என்ற புகாரும் வெளி வந்துள்ளது. சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு கைதிகளுக்கு வழங்கும் உணவு எனக் கூறிவிட்டு ஏதோ தலை தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளையை கவனிப்பதுபோல கவனித்து வருகிறது சிறைத்துறை. பிரெட் அல்வா, பைனாப்பிள் கேசரி, போண்டா என செந்தில் பாலாஜியின் விருப்ப உணவுகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. அவர் வெளியே இருந்ததை விட சிறையில் சொகுசாக இருப்பதாக விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
கர்நாடகா சிறையில் இருந்த சசிகலாவை அடிக்கடி சிறை அதிகாரி ஒருவர் சந்தித்தது பேசியதும், அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் அவரை வெளியே செல்ல அனுமதித்ததும் சிசிடிவி காட்சி மூலமாக காணொளி வெளியாகி பெரும் ஏற்படுத்தியது. இதுபோன்று)) அதே நேரம் புழல் சிறைத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுப்பதெல்லாம் சட்ட விதிகளுக்கு எதிரானது என முன்னாள் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கெல்லாம் துணை போகும் அதிகாரிகள் மீது இன்றைக்கு இல்லை என்றாலும், என்றைக்காவது ஒரு நாள் நடவடிக்கை பாயும். ஆண்டவனையே பார்த்து “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று வாதாடிய நக்கீரன் வாழ்ந்த இந்த நாட்டில் ஒரு ஊழல் அமைச்சருக்காக சட்டத்தை வளைக்க முற்படுவது அவமானகரமானது என்பதை உணருமா விடியா அரசு?
Discussion about this post