தொடர் மழை எதிரொலியாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து கிலோவுக்கு 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்து கிலோவுக்கு 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ கத்தரிக்காய் 50 ரூபாய்க்கும், கேரட் 70 ரூபாய்க்கும், பீட்ரூட் 60 ரூபாய்க்கும், பீன்ஸ் 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 60 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 35 ரூபாய்க்கும் மற்றும் சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Discussion about this post