இன்றைய நவீன காலகட்டத்தில், அதிக லாபம் ஈட்டும் நோக்கில் எல்லாப் பொருட்களிலும் செயற்கை முறையில் ராசயணம் செறிவூட்டப்படுவது கவலைக்குறிய விஷயமாகும்.
குறிப்பாக செயற்கை இனிப்புகளானது குளிர் பானங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றில் சேர்க்கப்படுவதுடன், தற்போது டூத் பேஸ்ட்டில் கூட பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை இனிப்புகள் சர்க்கரையுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளை கொண்டது என்று சொல்லப்படுகிறது.
செயற்கை இனிப்புகள் பாதுகாப்பானதா? இல்லையா? என்று ஆய்வு செய்த போது, அதில் பயன்படுத்தப்படும் அஸ்பார்டேம்((ASPARTAME)) இனிப்பானது உடலில் 92 வகையான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக செயற்கை இனிப்பு அஸ்பார்டேம், புற்றுநோயை உண்டாக்கும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
என்னென்ன நோய்கள் வரும்?…
செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவதால் நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கைக்கும் மருத்துவர்கள், உடல் எடை அதிகரித்து, ரத்த அழுத்தம், தலைவலி, கொழுப்பு தொடர்பான பிரச்சினைகளையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சர்க்கரை இல்லை என்று நினைத்து ஐஸ்கிரீம் அல்லது பிற இனிப்பு உணவுப் பொருட்களை சாப்பிடுவோர், கலோரிகளைத் தான் உட்கொள்கிறார்கள் என்பதை தெரியாமல் இருப்பது அறியாமையின் உச்சமாகும்.
அதேபோல் உடல் எடை அதிகரிக்காது என்று நினைத்து விரும்பி சாப்பிடும் செயற்கை இனிப்புகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அஸ்பார்டேம், சுக்ரோலோஸ் போன்றவற்றை நீண்ட காலமாக எடுத்துக் கொண்டால் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படுவதுடன், மலட்டுத் தன்மையும் ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
Discussion about this post