தமிழ் சினிமாவுல பிச்சுமணி வடிவேலு, அரசாங்க வேலை கிடச்ச சந்தோஷத்துல துள்ளுற மாதிரிதான், இன்னைக்கு தமிழகத்துல நகர்ப்புற உள்ளட்சி பிரதிநிதிகள் எல்லாம் மகிழ்ச்சியில இருக்காங்க.
அப்புறம் சும்மாவா? தமிழகத்துலயே முதல் முறையா அவங்களுக்கெல்லாம் மதிப்பூதியம் கொடுக்கிறதா இந்த விடியா அரசு அறிவிச்சிருக்கே…
மேயர்ல இருந்து பேரூராட்சி கவுன்சிலர்கள் வரைக்கும் மாசா மாசம் மதிப்பூதியம் தர்றோம்னு ஸ்டாலின் அறிவிச்சிருக்காரு…
மக்களுக்கான சேவைன்னு சொல்லி 75 வருஷமா மதிப்பூதியம் வழங்காம இருந்த நிலையில, புதுசா இந்த நடைமுறைய அறிவிச்சிருக்குது திமுக அரசு…
தமிழகத்த பொறுத்த வரைக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கு. மாநகராட்சிகள்ல ஆயிரத்து 374 வார்டு உறுப்பினர்களும், பேருராட்சிகள்ல 7ஆயிரத்து 621 மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகள்ல 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர்களும் இருக்காங்க. உள்ளாட்சி தேர்தல்ல மக்களால தேர்வு செய்யப்பட்ட இந்த வார்டு உறுப்பினர்கள்ல இருந்துதான், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் அதே மாதிரி பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் எல்லாம் தேர்ந்தெடுக்கப்படுறாங்க.
இத்தன வருஷ காலமா இவங்க யாருக்கும் மாத சம்பளம்னு ஒண்ணும் கிடையாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள்ல மாசத்துக்கு குறைஞ்ச பட்சம் ஒரு கூட்டமாவது கூட்டப்படும். அப்படி, மாநகராட்சி கூட்டத்துல பங்கேற்கிற மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு அன்னைக்கு மட்டும் 800 ரூபாயும், இதே மாதிரி நகராட்சிகள்ல 600 ரூபாயும் பேரூராட்சிகள்ல 300 ரூபாயும் வழங்கப்பட்டு வந்துச்சு.
இந்த நிலையில விடியா திமுக ஆட்சிக்கு வந்தும், உள்ளாட்சிகள்ல மெஜாரிட்டியா இருந்த மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் எல்லாம் நாங்க, முழு நேரமும் மக்கள் பணியில் ஈடுபடுறதால, எங்களுக்கு மாசச் சம்பளம் வேணும்னு, கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாசம் 13ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கிட்ட கோரிக்கை வச்சிருக்காங்க.
கோரிக்க வைச்ச 15 மாசத்துல அத நிறைவேத்தி மாசச் சம்பளத்துக்கான அறிவிப்ப வெளியிட்டிருக்காரு முதல்வரு ஸ்டாலின். மேயர்களுக்கு மாசம் 30 ஆயிரம், துணை மேயர்களுக்கு 15 ஆயிரம், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு 10 ஆயிரம், நகராட்சி தலைவர்களுக்கு 15 ஆயிரம், துணைத் தலைவர்களுக்கு 10 ஆயிரம், நகராட்சி கவுன்சிலர்களுக்கு 5,000, பேரூராட்சி தலைவர்களுக்கு 10 ஆயிரம், துணைத் தலைவர்களுக்கு 5,000, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு 2ஆயிரத்து 500 ரூபாய் இந்த மாசத்துல இருந்தே வழங்கப்படும்னு சொல்லி இருக்காரு
அரசாங்கத்தோட அறிவிப்பு படி, ஒரு மாசத்துக்கு மொத்தம் 21 மேயர்களூக்கு 6 லட்சத்து 30ஆயிரம், 21 துணை மேயர்களுக்கு 3லட்சத்து 15ஆயிரம், 1332 மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, 1கோடியே 33 லட்சம், நகராட்சி தலைவர்கள் 138 பேருக்கு 20லட்சத்து 70ஆயிரம், துணைத் தலைவர்கள் 138 பேருக்கு 13 லட்சத்து 80ஆயிரம், நகராட்சி கவுன்சிலர்கள் 3ஆயிரத்து 567 பேருக்கு 1கோடியே 78 லட்சம், 490 பேரூராட்சி தலைவர்களுக்கு 49 லட்சம், 490 துணைத்தலைவர்களுக்கு 24லட்சத்து 50ஆயிரம், பேரூராட்சி கவுன்சிலர்கள் 6ஆயிரத்து 641 பேருக்கு 1கோடியே 66 லட்சம் ரூபாய் சம்பளமா கொடுக்கப் போறாங்க. அதாவது மொத்தமா ஒரு மாசத்துக்கு 5கோடியே94 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய். அப்படின்னா ஒரு வருஷத்துக்கு 71 கோடியே 33 லட்சத்து, 40ஆயிரம் ரூபாய்.
மக்களோட தேவைகளுக்காக செலவு செய்ய நிதி இல்ல, மக்கள் திட்டங்கள நிறைவேத்த நிதி இல்லன்னு கைய விரிக்கிற இந்த விடியா அரசு, மக்கள் சேவைக்காகத்தான் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு வாரோம்னு சொல்றவங்களுக்கு, கோடிக்கணக்குல செலவு பண்றதுக்கு என்ன அவசியம் வந்துச்சு.
மாநகராட்சியில் குப்பை மேலாண்மைக்கு பணமில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்த செயல்படுத்த பணம் இல்லன்னு சமீபத்துல நெல்லை மாநகராட்சியில சொன்னதாக செய்தி வெளியாச்சு… இதையெல்லாம் நிறைவேத்த நிதி தரமாட்டீங்க… ஆனா சம்பளங்கிற பேருல திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள கவனிக்கிறீங்களா?
உள்ளாட்சி பிரதிநிதியா இருக்குற யாரும், அன்னாடம் வேலை பார்த்துத்தான் சாப்பாட்டு கதைய ஓட்டனுங்கிற நிலையில இல்ல… திமுகவுல சீட்டு கொடுக்குறதுக்கே பெட்டி பெட்டியா வாங்குனதா வாய்ப்பு கெடைக்காதவங்க புலம்புனதெல்லாம் தெரியாதா?
அப்படியே நீங்க சம்பளம் கொடுத்தீங்கன்னா, சம்பள விதிப்படி அவங்க முழு நேரமும் மக்கள் பணியையே பார்க்கணுமே செய்வாங்களா? சொத்து வாங்குறது விக்கிறது எல்லாத்துக்கும் முன் அனுமதி பெறணும்… செய்வாங்களா? மொத்தத்துல மக்களோட வரிப்பணத்தை இப்படியெல்லாம் வீணாக்கிட்டு, தமிழக மக்களோட கைகள்ல திருவோட கொடுக்காம இந்த திராவிட மாடல் அரசு ஓயாது போல…
Discussion about this post