வறுமை என்பது ஒரு குடும்பம் அல்லது தனிநபர் அவர்களின் பொருளாதார திறன் மற்றும் அடிப்படை தரநிலைகளுக்கான தேவைகள் இல்லாத நிலை அல்லது சூழ்நிலையாகும். மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு தனிநபரின் வேலை, சம்பளம் போதுமானதாக இல்லாத சூழ்நிலையே வறுமை. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் வறுமை என்பது சமீபத்தில் UNDP பல பரிமாண வறுமை எம்பிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 2006-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் 15ந்து ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. யுஎன்டிபி எனப்படும் ஐ.நா. வளர்ச்சித் திட்டம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. உலகளவில், 111 வளரும் நாடுகளில் உள்ள மொத்த 610 கோடி மக்களில், 19.1% அல்லது 120 கோடி பேர் வறுமையில் வாழ்கின்றனர்.
ஐ.நா. கணக்கெடுப்பின்படி, கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மக்கள் தொகை தற்போது 142.86 கோடி என்றளவில் உள்ளதாக ஐ.நா.வின் அண்மை அறிக்கை தெரிவிக்கின்றது. அதன்படி, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2005-ல் 44.3% ஆக இருந்த நிலையில் 2019/2021-ல் 11.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
குழந்தை இறப்பு விகிதம் 4.5 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. சமையல் எரிவாயு வசதி இல்லாதோர் எண்ணிக்கை 52.9 சதவீதத்தில் இருந்து 13.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. சுகாதார கட்டமைப்பு வசதிகள் இல்லாதோரின் எண்ணிக்கை 50.4 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. சுத்தமான குடிதண்ணீர் வசதி இல்லாதோர் எண்ணிக்கை 16.4 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. மின்சார வசதி இல்லாதோர் எண்ணிக்கை 44.9 சதவீதத்தில் இருந்து 13.6 சதவீதமாக குறைந்துள்ளது.
இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லதாத வளர்ச்சியாகப் பார்க்கப்டுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் வறுமை ஒழிப்பு என்பது நிகழ்ந்துள்ளது என்பது ஐ.நா வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரிகிறது. இந்தியா மட்டுமல்லாமல் அதன் உட்பட 25 நாடுகளின் முயற்சியால் வறுமை ஒழிப்பில் காட்டி உள்ள முன்னேற்றமானது வறுமை ஒழிப்பு என்பது நாடுகளில் சாத்தியமானது என்பதில் ஐயமில்லை.
Discussion about this post