ஈரோடு அரசு விரைவு பேருந்தில் மாற்றுத்திறனாளி தம்பதியை ஏற்ற மறுத்த நடத்துநர் இருவரையும் கீழே இறக்கிவிட்ட சம்பவம் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விடியா திமுக ஆட்சியில் சாதாரண ஏழை எளிய மக்களிலிருந்து மாற்றுத்திறனாளிகள் வரை தொடர்ந்து அவதிக்குள்ளாக நேர்வது தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இந்திய மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுப் போக்குவரத்து நடத்துநர் அவதூறாக நடத்தினார். அதேபோல இந்த சம்பவமும் நேற்று அரங்கேறியிருக்கிறது. இதனை விடியா திமுக அரசின் போக்குவரத்துத் துறை கண்டுகொள்ளுமா? அல்லது டயர் ஊழலில் பணம் சம்பாதித்து மவுனியாக இருக்கும் அமைச்சர் சிவசங்கர் கண்டுகொள்வரா?
என்ன நடந்தது…!
கோவைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி மகேந்திரன், சுமதி தங்கள் ஐந்து வயது மகனுடன் சொந்த வேலையாக ஈரோடுக்கு நேற்று காலை வந்திறங்கினர். மதியம் 1:30 மணியளவில் கோவை செல்ல ஈரோடு மத்திய பஸ்டாண்டில் பேருந்திற்காக காத்திருந்துள்ளனர். கோவைக்கு செல்லும் டி.என். 33-3362 என்ற எண் கொண்ட இடைநில்லா அரசு பேருந்தில் இருவரும் ஏறி இருக்கின்றனர். அவர்களைத் தடுத்த கண்டக்டர் “மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதியில்லை” என்றார். மாற்றுத்திறனாளியான மகேந்திரன் “இது போன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது: என்று கூரி அதற்கான ஆவணங்களையும் காட்டியுள்ளார். ஆனால் நடத்துநர் அந்த ஆவணங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பின் நடத்துநர் மாற்றுத் திறனாளி தம்பதியைத் தரைக்குறைவாக பேசி வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தில் உள்ள நேர காப்பாளரிடம் தம்பதியினர் புகார் அளித்தனர். அவரோ வேறு பேருந்தில் செ;ல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அரசு விரைவு பேருந்தில் செல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை.
பேருந்து நிலையத்தில் நின்ற மற்ற பயணிகள் இந்த நிகழ்வினைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மாற்றுத் திறனாளியை அவமதித்த அரசு பேருந்து நடத்துனர் மற்றும் நேர கண்காணிப்பாளர் செயல், பல தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
மாற்றுத்திறனாளி மகேந்திரனின் கூறியது..!
பேருந்தில் ஏறிய எங்களை நடத்துநர் கீழே இறக்கிவிட்டார். அவமதிக்கும் வகையில் தவறான வார்த்தைகளை பேசினார். அரசு விரைவு பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள், அவர்களது உதவியாளருக்கு 75 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் எங்களை இறக்கிவிட்டதுடன் அவமதித்து, மிரட்டல் தொணியில் பேசினார். எனவே அந்த நடத்துநர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் மாற்றுப் பேருந்தில் தம்பதிகள் இருவரும் சென்றனர்.
இந்தச் சம்பவத்திற்கு இதுவரை போக்குவரத்துத்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளன. விடியா திமுக ஆட்சியில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவது தொடர் வலைபின்னலாக உள்ளது. மக்களை அலைக்கழிக்கும் ஒரு அரசு, சீக்கிரம் கோட்டையிலிருந்து வீட்டிற்கே திருப்பி அனுப்பப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post