வகுப்பறையில டீச்சர்கிட்ட ஒப்பிக்கிறமாதிரியேதான் செய்தியாளர் சந்திப்புலயும் பேசிக்கிட்டு திரியுறாங்க நம்ம மாநகரத் தாய்… அதாங்க மாநகர மேயரம்மா!
இப்பக்கூட மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்கள டூர் கூட்டிட்டு போறது சம்பந்தமா பேட்டி கொடுக்கிறதுக்குள்ள அவங்க பட்டபாடு இருக்கே… இப்பவே கண்ண கட்டுதே ரேஞ்சுலதான் இருந்துருக்கு…
மாநகராட்சி பள்ளி மாணவர்கள பிர்லா கோளரங்கத்துக்கு டூர் கூட்டிட்டு போறோம்னு சொல்றதுக்குள்ளத்தான் எத்தன டங் ஸ்லீப்..
அப்புறமா இனிமே எங்கெல்லாம் ஸ்கூலுக்கு பசங்கள கூட்டிட்டு போறோம்னு லிஸ்ட்ட பார்த்து படிச்சவங்க, மாணவர்கள் எத்தன பேருன்னு கணக்கு சொன்னத பார்த்து பக்கதுல இருந்த பெண் அதிகாரியே ஜெர்க் ஆகிட்டாங்க.
மழைநீர் வடிகால்வாய் பணிகள் சரியா நடக்காதது தொடர்பாவும், சாலைகள்ல மழை நீர் தேங்குறது தொடர்பாவும் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகேட்டதும்… இது சரிப்பட்டு வராதேன்னு, எல்லாத்தையும் மேல இருக்குறவன் பார்த்துக்கிடுவாங்கிற ரேஞ்சுல அமைச்சர் நேரு அண்ணன் பார்த்துக்கிடுவாருன்னு சொல்லி ஜகா வாங்கிட்டாங்க…
அப்புறமா மாமன்னன் படம் தொடர்பா செய்தியாளர் கேள்வி கேட்டதும் மேயரம்மா முகத்துல அப்படி ஒரு புன்னகை… திமுகவுல நடக்குற சமூக நீதி கொள்கைய உதய் அண்ணா காமிச்சிருக்காங்கன்னு பாராட்டு பத்திரம் வாசிச்சாங்க..
((ப்ரீத்: சிர்ப்பது மட்டும் ரிப்பீட்டு) டைமிங் 06:48 டூ 07:02))
திமுகவுல சாதி ரீதியான பாகுபாடுகள் தொடர்பான கேள்விக்கு எனக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையேன்னு சொன்னவங்க, கேள்விய அப்படியே உதய்னாகிட்ட மாத்திவிட்டுட்டாங்க..
இதையெல்லாம் தாண்டி தக்காளி சம்பந்தமா கேட்டதும்…. ஹலோ அது ஏன் டிபாட்மெண்டலாம் இல்லன்னு சிரிச்சிக்கிட்டே ஆவேசம் காட்டுனவங்க கடைசி வரைக்கும் பதில் சொல்லாம அது ஒரு ஜோக்குங்குறமாதிரியே சிரிச்சிகிட்டே இருந்துருக்காங்க… இத்தனைக்கும் பக்கத்துல நிக்குற தணிக்கை குழு தலைவர் பாலவாக்கம் விஸ்வநாதன், பரிசீலிக்கிறோம்னு சொல்லுங்கன்னு எடுத்துக் கொடுத்தும் அதையெல்லாம் கண்டுக்கமாக நடைய கட்டிருக்காங்க…
நாம் வாங்கி வந்த வரம் அப்படிங்கிற மாதிரி சென்னை மக்களுக்கு கிடைத்த மேயர் இப்படித்தான் செயல்பட்டுக்கிட்டு இருக்காரு… என்ன முன்னாடியெல்லாம் அமைச்சர் சேகர்பாபு கூடவே… ஒரே ஒரு குருக்கள் வாராருன்னு சொல்ற சிஷ்யை மாதிரி இருந்தாங்க… இப்ப அவங்களே குருக்களா மாதிரி தனி ஆவர்த்தனம் செஞ்சிக்கிட்டு வர்றாங்க…
என்ன ஒண்ணு, சென்னை மாநகர மக்களும் தக்காளி பயன்படுத்துவாங்களே, அவங்களுக்கு குறைஞ்ச விலையில தக்காளி கிடைக்க நம்மோட பங்களிப்பும் இருக்கணுமேன்னு, மாநகர தாயா எப்ப யோசிப்பீங்களோ?
Discussion about this post