இவ்வளவு நாள் எங்கு இருந்தார்கள் என்று தெரியாத அமைச்சர்கள் எல்லாம் அதிமுகவின் ஒவ்வொரு நாளின் வளர்ச்சியையும் கண்டு அஞ்சி திடீரென்று ”உள்ளேன் அய்யா” என்று களத்திற்குள் புகுகிறார்கள். அப்படி திடீரென்று களத்தில் இறங்கி தன்னைத்தானே புண்படுத்திக்கொண்டவர்தான் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
சரி அமைச்சர் ரகுபதி என்னதான் செய்துள்ளார் என்று நாம் பார்த்தால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கிற்கு இசைவு ஆணைப் பிறப்பிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார். என்னது இது இவ்வளவு நாள் ஆளுநரிடம் மல்லுக்கு நின்றுவிட்டு தற்போது ஆளுநரிடமே சென்று தஞ்சமடைந்திருக்கிறது இந்த திமுக என்று மக்களே நகைக்கிறார்கள்.
அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என கொக்கரித்துக்கொண்டிருந்த திமுக தற்போது முன்னாள் அமைச்சர் விவகாரத்தில் ஆளுநரிடம் போய் நிற்பது என்ன வகை என்றே தெரியவில்லை. ஒருவேளை தனக்கு வந்தால் இரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்ற தொணியில் திமுக செயல்படுகிறதோ என்ற எண்ணம் அனைத்து தரப்பினரிடமும் எழாமல் இல்லை.
இவ்வளவு வியாக்கியானமாக பேசும் அமைச்சர் ரகுபதி அவர்களே, உங்கள் மீது ஒரு சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளதே அதை மறந்துவிட்டீர்களா என்ன? அமைச்சர் ரகுபதியின் செயலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பதுரை சாட்டையடி பதில் ஒன்றைத் தந்துள்ளார். அவரின் கூற்றுப்படி, உச்சநீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு CRL.A.613/15 -ஆனது எட்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதிமுக அமைச்சர்களின் வழக்கில் வேகம் காட்டும் ரகுபதி அவர்களே, உங்கள் வழக்கில் வேகம் காட்டதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்போது மட்டும் உங்களுக்கு ஆளுநர் தேவை, ஆனால் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் வேண்டாம். என்னங்கய்யா இது எவ்வளவு பெரிய கம்பி சுத்தும் கதையாக இருக்கிறது இந்த திமுக அமைச்சரின் செயல்பாடு. ஊருக்கு உபதேசம் செய்பவர்கள், தனக்கும் அது பொருந்தும் என்பதை அடிக்கடி மறந்து போய்விடுகிறார்கள் என்று அரசியல் விமர்சகர்களும் சாடி வருகின்றனர்.
Discussion about this post