ஜி20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அரசுகளுக்கிடையேயான மன்றமாகும். இதில் 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள். இந்த அமைப்பானது சர்வதேச நிதி நிலைத்தன்மை, காலநிலை மாற்றம் தணிப்பு, மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற உலகப் பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணச் செயல்படுகிறது. அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, செருமனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி,ஜப்பான், மெக்சிகோ, சவுதி அரேபியா,உருசியா, தென் அமெரிக்கா,தென் கொரியா, துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இணைவதே ஜி20 ஆகும். ஜி20 தொழில்மயமான மற்றும் வளரும் நாடுகள் உட்பட, உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களை உள்ளடக்கியது. இது மொத்த உலக உற்பத்தியில் 80 சதவீதமும், சர்வதேச வர்த்தகத்தில் 75 சதவீதமும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் உலகின் நிலப்பரப்பில் 60 சதவீதமும் கொண்டுள்ளது.
சென்னையில் ஜி20…!
ஜி20 கூட்டம் மூன்றாவது முன்றாவது முறையாக சென்னையில் நடைபெற இருக்கிறது. பேரிடர் அபாய குறைப்பு தொடர்பாக 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க்கும் இந்த ஜி20 கூட்டமானது வருகின்ற ஜீன் 24, 25, மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டதிற்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினார். இந்த கூட்டம் குறித்து தமிழக அரசு கடந்த 2022 டிசம்பர் 1 முதல் 2023 நவம்பர் 30-ம் தேதிவரை நடைபெறஉள்ள ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கும் என்று தெரிவித்தது. இந்திய தலமையில் பேரிடர் அபாயத்தை குறைபதற்கான புதிய பணி குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பணிகுழுவின் இரண்டு கூட்டங்கள் முடிவடந்த நிலையில் மூன்றவாது கூட்டம் சென்னையில் நடபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டதிற்கு தலைமை வகித்த தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா கூட்டத்திற்க்கு வருகை புரிந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலர்களை சிவ்தாஸ் மீனா வரவேற்றார். இந்த ஜி20 மூன்று நாள் கூட்டத்தைச் சிறப்பாக நடத்த அனைத்து முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்யும் மாறு அந்தந்த சமந்தபட்ட துறை செயலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலர் கமல் கிஷோர், உறுப்பினர் ராஜேந்திர சிங், ஜி-20 மாநாட்டின் இயக்குநர் மிருணாளினி வஸ்தவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Discussion about this post