கடந்த ஆண்டு 2011-ம் ஜப்பானில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் இருந்தே மீளாத ஜப்பான் அடுத்து ஒரு பெரும் விபத்தை சந்திக்க நேர்ந்த்தது அதுதான் ’’சுனாமி பேரலை’’ ஜப்பான் நாட்டில் மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம் தான் இந்த சுனாமி பேரலை. இந்த சுனாமியானது ஜப்பான் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஜப்பானில் உள்ள புகுஷிமா பகுதியில் உள்ள அணுமின் உலை பெருமளவு பதிக்கப்பட்டது. டாய்ச்சி அணு உலைக்குள் அதிக அளவு தண்ணீர் ஊடுருவியதால் மின்சார உற்பத்தி பாதிக்கபட்டது. வெப்பம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் காற்றில் பரவும் கதீர்வீச்சை தடுக்கவும், வெப்பத்தை குறைக்கவும் அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது.
குறையாத தாக்கம்:
ஆண்டுகள் கடந்தாலும் அதனின் தாக்கம் குறையாமல் இன்றளவும் இருக்கிறது. என்பதற்க்கு புகிஷிமா அணுமின் உலையே ஓர் சாட்சி. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள சூழ்ச்சியை கையாகிறது ஜப்பான். அணுமின் உலையயை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணியைச் செய்து வருகிறது ஜப்பானின் டெப்கோ நிறுவனம். அணு உலையில் கதிர்வீச்சைக் குறைக்க, 12.5லட்சம் டன் லிட்டர் தண்ணீர் இதுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீர் கதிர்வீச்சுடன் கலந்து கழிவுநீராக மாறிவிடும். பின்னர் அந்தக் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அணு உலையிலுள்ள தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும். இந்தநிலையில், அடுத்த ஆண்டு இறுதிக்குள் கழிவுநீர் தேக்கி வைக்கும் தொட்டிகள் நிரம்பிவிடும் என்று டெப்கோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் சேமித்து வைக்கப்பட்ட கழிவுநீரை பசுபிக் பெருங்கடலில் கலக்க முடிவு செய்து இருக்கிறது ஜப்பான் அரசு.
ஜப்பானின் முடிவு:
இது குறித்து ஜப்பான் அரசு கூறுகையில் புகுஷிமா அணு உலையை முழுவதுமாக செயலிழக்கச் செய்ய வேண்டுமென்றால், கழிவுநீரைக் கடலில் கலப்பதைத்தவிற வேறு வழியில்லை என்றும், கதிர்வீச்சு நிறைந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே கடலில் கலக்கப்படும். ஐ.நா-வின் சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த பணி நிறைவு பெறும் என்று கூறியுள்ளது.
ஜப்பானை சூலும் எதிர்புக்கள்:
ஜப்பான் அரசு இரண்டு ஆண்டுக்குள் முடிவடையும் என்று கூறிய நிலையில் இன்னும் முடிவடையாமல் இந்த திட்டம் தொடர்கிறது. இது குறித்து ஜப்பான் அரசு பரிசீலனை செய்து வந்ததற்கு மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தார்கள். எனவே சிறிது காலத்திற்கு இந்தத் திட்டத்தினை செயல்படுத்தப்படாமல் இருந்தது ஜப்பான் அரசு. தற்போது வேறு வழியில்லை என்ற நிலை வந்த பிறகே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புவதாக ஜப்பான் தகவல் தெரிவித்திருக்கிறது.
’மீனவர்களின் எதிர்ப்பு’
ஜப்பான் மீன்வள கூட்டுறவு அமைப்பினர், இது ஜப்பானிய மீனவர்களை நசுக்கும் செயல் என்று தெரிவித்துள்ளனர். ஜப்பானைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் அரசின் இந்த முடிவுக்கு பல எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதனை கண்டும் காணாமலும் இருக்கிறது ஜப்பான் அரசு. இந்த திட்டதால் பெரும் பாதிப்புகள் ஏற்படும்’ என்று கூறி பல போராட்டங்களை சுற்று சூழல் ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். இந்தத் திட்டம் குறித்து அண்டை நாடுகளான தென்கொரிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து:
கழிவுநீரில் உள்ள கதீர்வீச்சு நீக்கபட்ட பிறகே கடலில் கலக்கப்படும் என்று தெரிவித்தாலும், அதிலிருந்து ட்ரிட்டியத்தை முழுமையாக அகற்ற முடியாது என ஆர்வலர்கல் தெரிவிக்கின்றனர். இது எந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்று நமக்கு தெரியாது. என்றும் கூறுகிறார்கல். மேலும் பசுபிக் பெருங்கடலின் தரமும் வளமும் மோசமடைந்த நிலயில் பல வகை கடல் வாழ் உயிரினங்கள், கடல் பிராணிகள், அழிந்துவிட்டன. இதற்கிடையில், இந்த கழிவு நீர் கலந்தால் என்ன என்ன விளைவிகல் ஏற்படும் என்றும் பாதிப்பு எவ்வாறு ஏற்படும் என்றும் கூறுகிறார்கள் சுற்று சூழல் ஆர்வலர்கள்.
Discussion about this post