ஆய்வு என்ற பெயரில் குவாரிகளை மூடி வரும் விடியா அரசு, குவாரி உரிமையாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார்.விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கல்குவாரிகளின் வேலை நிறுத்தத்தால் அத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும் தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் இதனை தடுக்காமல் விடியா அரசு, குவாரி உரிமையாளர்களை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினார்.ஆய்வு என்ற பெயரில் தற்போது குவாரிகள் மூடப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், தொழில் செய்ய முடியாத அளவுக்கு கடுமையான வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன எனவும் தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் ஏராளமான குவாரி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.தமிழக அரசு, குவாரி தொடர்பான சட்டங்களை எளிமையாக்க வேண்டும் என வலியுறுத்திய அதிமுக எம்பி சி.வி.சண்முகம், குறிப்பிட்ட சிறுகுறு தொழிலாளர்கள் மீது விடியா அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக காட்டமாக தெரிவித்தார்.தவறான அதிகாரியின் பேராசையால், குவாரி தொழில் தற்போது அழிந்து வருகிறது என்றும் பலருக்கு வேலை வாய்ப்பு தரும் இந்த தொழிலை அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் இந்த தொழில் செய்யும் தொலாளிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Discussion about this post