தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தலை 6 மாதத்திற்குள் நடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்து இருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்றும், இடைத்தேர்தலை நடத்த தடை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், விரைவில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post