இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருப்பவர் விராட் கோலி. அவருக்கு அடைமொழியாக கிங் என்கிற பட்டம் உண்டு. இரசிகர்கள் அவரை செல்லமாக கிங் கோலி என்றுதான் அழைப்பார்கள். கோலியின் செயல்பாட்டினைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக இந்திய அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கக் கூடியவர் சுப்மன் கில் ஆவார். சமீப காலங்களில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்து தன்னுடைய திறமையை நிலைநாட்டி இருக்கிறார்.
விராட் கோலியை கிங் என்று அழைப்பது போல, சுப்மன் கில்லை ப்ரின்ஸ் என்று இரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள். தற்போது விராட் கோலியும், சுப்மன் கில்லும் லண்டனில் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் களம் இறங்க உள்ளனர். போட்டிக்கும் முன்பு விராட் கோலி தன் மனம் திறந்து சுப்மன் கில் வளர்ச்சிக்காக சில கருத்துக்களை பேசியுள்ளார்.
“சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன். அவருடைய திறமை எனக்கு தெரியும். யாருடைய தயவு இன்றி விளையாட வந்ததால், அவரால் நீண்ட நாட்களுக்கு விளையாட முடியும். அவரின் விளையாட்டு இந்திய அணிக்கு வலுசேர்க்கும்” என்று விராட் கோலி தன்னுடைய கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
Discussion about this post