கடந்த ஆண்டே தமிழ்நாடு அரசு அறிவித்தும்கூட 90 சதவிகித பொறியியல் கல்லூரிகள் பின்பற்றவில்லை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அரசாணையை. இந்தாண்டாவது பின்பற்றுமா? தனியார் கல்லூரிகள் என்ன செவ்வாய் கிரகத்தில் உள்ளதா. உயர் கல்வித் துறை கட்டுப்பாட்டில் இல்லையா, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதற்கு என்ன பதிலை சொல்ல போகிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழே இயங்கக்கூடிய பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள், தன்னாட்சி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் உட்பட அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கான முதல் பருவத்தில் இடம் பெறக்கூடிய தமிழர் மரபு மற்றும் இரண்டாம் பருவத்தில் இடம் பெறக்கூடிய தமிழரும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை பல்கலைக்கழக பாடத்திட்டத்தின்படி நடத்த வேண்டும் என 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதனை பல்வேறு கல்லூரிகள் பின்பற்றப்படவில்லை. எனவே அதற்கு தேவையான எம் ஏ, எம்ஃபில், பிஹெச்டி, நெட் மற்றும் செட் ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் இது குறித்து 12/06/ 2023 தேதிக்குள் தெரிவிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து அனைத்து கல்லூரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையாவது பின்பற்றுவார்களா? பின்பற்றுகிறார்களா என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் தமிழை வளர்ப்பதாக கூப்பாடு போடும் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசும் கண்காணிக்குமா என்பது கேள்விக்குறியே.
Discussion about this post