தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால் விடியா முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் வாடிப்பட்டி மந்தை திடலில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமார், தமிழகத்தில் 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் இதனால், மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டினார். மேலும் மக்கள் மீது அக்கறை இன்றி விடியா முதல்வர் சுற்றுலா சென்றுள்ளார் என விமர்சித்தார். தொடந்து பேசிய அவர், கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று விடியா அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
Discussion about this post