திமுக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலையில், சோதனை நடத்த வந்த அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை உடைத்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முழுவதும் டாஸ்மாக் கடையில் 10 ரூபாய் கமிஷன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை பீளமேடு பகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயனின் அலுவலகம் மற்றும் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, வருமான வரித்துறையினரின் காரை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஐடி அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Discussion about this post