நிதித்துறை அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவிற்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிஆரிடம் செய்தி மற்றும் தகவல்தொடர்புத் துறையானது கொடுக்கப்பட்டுள்ளது. செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த மு.பெ. சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த வாரிசு டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை கொடுக்கப்பட்டுள்ளது. ஊழலில் திளைத்த நாசர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றம். மேலும் மனோ தங்கராஜிற்கு பால் மற்றும் பால்வளத்துறை கொடுக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பேசிய ஆடியோ ஒன்று சமீபமாக வலைதளங்களில் விறுவிறுவென பரவியது. அது சர்ச்சையான நிலையில் திமுகவிற்கும், திமுகவினை நிர்வகிக்கும் குடும்ப அரசியலுக்கும் பாதகம் ஏற்பட்டு விடும் என்று எண்ணிய ஸ்டாலின் நிதியமைச்சர் பதவியிலிருந்து பழனிவேல் தியாகராஜனை நீக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதி வருகின்றனர்.
Discussion about this post