ஐபிஎல் தொடர் 44ஆவது லீக் ஆட்டத்தில், 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றிபெற்றது.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், உள்ளூர் அணியான குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. முகமது ஷமியின் வேகப்பந்தில் டெல்லி அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. டெல்லி அணி 23 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தது.இதனையடுத்து வந்த அக்சர் பட்டேல் 27 ரன்களும், அமான் ஹக்கிம் கான் அதிரடியாக ஆடி 51 ரன்களும் எடுத்து, அணிக்கும், ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளித்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். மோகித் சர்மா 2 விக்கெட்டும், ரஷித் கான் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா அரை சதம் எடுத்து 59 ரன்களில் ஆட்டமிழக்காமல் கடைசி வரை விளையாடினார். இந்த ஆட்டத்தின் முடிவில், குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபாரமாக வெற்றிபெற்றது.
Discussion about this post