காஞ்சிபுரத்தில் பட்டாசு வெடி விபத்து நடைபெற்ற இடத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் நேரில் சென்று பார்வையிட்டார்.
தீபாவளிக்காக பட்டாசு வாங்கி வீட்டில் வைத்திருந்த போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து குறித்து மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விசாரணை செய்து வருவதாகவுக் கூறினார் .
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாவண்ணம் முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழ்நாடெங்கும் பட்டாசு விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறிய அவர், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் , பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Discussion about this post