அமைச்சரவைக் கூட்டத்தில் பாதியிலேயே வெளியேறிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று 11 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே பழனிவேல் தியாகராஜன் கூட்டத்தை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறி இருக்கிறார். மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வா.வேலு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டும் அமைச்சரவை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே பாதியிலேயே புறக்கணித்துவிட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post